Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

பாடலும் காட்சியும் வேறு

இது எனது இன்னுமொரு முயற்சி.. ராஜா படத்தின் "ஒரு பௌர்ணமி நிலவு"பாடல் காட்சிக்கு மஜா திரைப்பட "சொல்லித்தரவா" பாடல் இணைந்துள்ளது....விக்ரம் மற்றும் அசின் ஆகியோரின் இடத்தில் அஜித் மற்றும் ஜோ....

பாடலும் காட்சியும் வித்தியாசமாக இணைந்தால்...

பாடல்களையும் காட்சிகளையும் வித்தியாசமாக இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தின் ஒரு வடிவம் தான் இது. அன்பே அன்பே கொல்லாதே என்ற அழகிய இனிமையான பாடல் ஏய் மாண்புறு மங்கையுடன் இணைந்திருக்கின்றது. இது எனது சிறிய முயற்சி......



லவாசா (LAVASA)

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் திட்டமிட்டு உருவாகிக் கொண்டிருக்கும் முதல் மலை நகரமாக புனே அருகில் உள்ள  லவாசா (LAVASA)  கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நகரம் Hindustan Construction Company மூலம் உருவாகி வருகிறது. 2002 ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த நகரம் 2021 ம்ஆண்டு முழுமை அடையும் என திட்டமிடப் பட்டுள்ளது.

ஏழு மலை தொடரில், 12 நகரங்கள், 25,000 acres (100 km2) பரப்பளவில் அமைய இருக்கின்றன. நான்கு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் நிலை 2010 டிசம்பருக்குள் முடிய இருக்கிறது. புனேயிலிருந்து 50 கிமீ, மற்றும் மும்பையிலிருந்து 180 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

இந்த நகரங்களில் Apollo Hospitals, Hotels and convention centres, University, Symbiosis Education, Hotels Institute of International Business Relations, Education, National School of Hotel Management, Germany, Millenium school education, Spaceworld theme park over 65 acres , Nick Faldo golf academy, Manchester City - Football academy, Hockey Australia - Hockey academy, MGM Studios. என்பன அமைக்கப் பட்டு வருகிறது.




மைனா

பறவைகளில் ஒன்று மைனா..இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்திய திரைப்படங்களிலும் தரமான படங்களில் ஒன்று மைனா என்பது படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். மிகத் தரமான படம். உண்மையில் சாதாரண ஒரு கதைதான் ஆனால் அந்த கதையை சிறப்பாக எடுத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக நடித்திருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. என்னடா படம் நன்றாக இருக்குது என்று சொல்லிட்டு சிறப்பா நடிக்கேல என்று சொல்றன் என்று யோசிக்காதீங்க.....உண்மையில் ஒவ்வொருவரும் காதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறாங்க என்று சொல்ல வேண்டும். இயல்பாக வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகில் எல்லாருமே பாராட்டும் படமாக அமைந்திருக்கின்றது மைனா. படத்தில் நகைச் சுவைக்கும் குறைவில்லை. அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் மைனா

Positive Negative

உங்களைச் சூழ உள்ளவர்கள் எப்படியான சிந்தனை கொண்டவர்கள்???? பொசிடிவ் சிந்தனையா? அல்லது நெகட்டிவ் சிந்தனையா? இதுவும் உங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.. இதோ அதற்கான சிறு கதை.....

ஒரு நாள் தவளைகள் சிலவற்றிற்கு தாம் வாழும் ஊரில் உள்ள கோயில் கோபுரத்தில் ஏற வேண்டும் என்ற ஆசை வந்ததாம். சரியென்று அந்த தவளைகள் எல்லாம் கோவில் அடிக்குச் சென்று ஏற முயற்சி செய்தனவாம். இதைப்பார்த்த அந்த கோவிலில் நின்ற மனிதர்கள் எல்லாம் சொன்னார்களாம், நீங்க தவளைகள் உங்களால் இதை செய்ய முடியுமா? உங்களுக்கு இது தேவைதானா? என்று. இருந்தாலும் தவளைகள் தங்களால் முடியும் என்று நினைத்து தத்தித்தத்தி தாவினவாம்... மீண்டும் .. மீண்டும் ...அங்கிருந்த மக்கள் நீங்கள் தவளைகள் உங்களால் இந்த கோபுரத்தில் ஏறமுடியாது....இந்த கோபுரத்தின் உயரமென்ன? உங்களின் அளவென்ன...இது உங்களால் முடியாது...தேவையில்லாமல் கஷ்டப்பட போறீங்கள்...என்று கூறிக்கொண்டே இருந்தார்களாம். தவளைகளும் முயற்சி செய்து பார்த்து பார்த்து மனிதர்கள் சொன்னதையும் யோசித்து தங்களால் இந்த உயரமான கோபுரத்தில் ஏறமுடியாது என்று எண்ணி முயற்சியை கைவிட்டு விட்டனவாம். ஆனால் ஒரு தவளை மட்டும் தத்தித் தத்தித் தாவி ஏறி ஏறி கோபுரத்தை அடைந்ததாம். என்னடா எப்படி அந்த தவளை மட்டும் சென்றடைந்தது என்று பார்தால் அந்த தவளைக்கு காது கேட்காதாம்!!!!! எனவே மனிதர்கள் சொன்ன வார்த்தைகள் ஒன்றும் அதற்கு விளங்கவில்லை. அது தன்னால் இலக்கை முயற்சித்து அடைந்து விட்டது. எனவே நாங்களும் எங்கள் இலக்கு என்ன என்பதை சரியாக தீர்மானித்து விட்டால் வேறு விடங்களினால் அதனை தடைப்படவிடாமல் பார்த்துக் கொண்டால் இலக்கு என்பது இலகு.

பழநிபாரதியின் காதலின் பின்கதவு

சினிமாவில் பாடல்களை எழுதும் கவிஞர் பழநிபாரதியின் காதலின் பின்கதவு என்ற கவிதைத் தொகுப்பை வாசித்த போது எல்லா கவிதைகளுமே சிறப்பாக காணப்பட்டன. அவற்றில் சில இதோ...

இசைத்தட்டின் ஞாபகத்தில்

கடிகாரத்தில் படுத்துக்கிடக்கும்

முட்கள் நாம்'

இன்று பிறந்த குழந்தைக்கு....

உனக்காக வைத்திருந்த

முத்தத்தில்

ஃப்ளோரைட் வாசம்....

உனக்காக பறத்த பூவில்

டீசல் தூசி...

உனக்காக வாங்கிய

வாழ்த்து அட்டையில்

மரத்தின் இரத்தம்....

எனது உலகத்திலிருந்து

எதுவுமில்லை உனக்கு....

காற்றை

அழுக்குப்படுத்தாமல் ஓடும்

உனது குட்டிக் கார்.....

வன்முறை அறியாத

இராணுவ வீரன்.....

சிரிக்க கற்றுக்கொடுக்கும்

சீனத் தங்கை....

விபத்துக்களைச் சந்திக்காத

விமானம்

ரயில்......

மதங்களற்ற

உனது பொம்மைகளின்

உலகத்திலிருந்து

முடிந்தால் கொடு

எனக்கொரு சிரிப்பை........

பழமொழி சொன்னா ஆராயக்கூடாது...... அனுபவிக்கோணும்....

வாழ்க்கையில் நாம் எல்லோருமே பழமொழிகளைக் கேட்டிருப்போம், வாசித்திருப்போம் அல்லது சொல்லியிருப்போம். ஆனால் தொடர்ச்சியாக ஒரு சில பழமொழிகள்தான் அடிக்கடி பாவிக்கப்படுகின்றன. எனவே சில பழமொழிகளை வாசிக்கும் போது வித்தியாசமாக பட்டது. சரியென்று வலைப்பதிவில் இட்டுவிட்டேன். இவற்றை வாசிக்கும் போது பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் சொல்வது போல் பழமொழி சொன்னா ஆராயக்கூடாதுடா.. அனுபவிக்கோணும்...சரியா...



  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்க கெடும்

  • பசித்தவன் மேல் நம்பிக்கை வையாதே

  • கரும்பும் எள்ளும் கசக்கினால் பலனாகும்

  • வீணை கோணினாலும் நாதம் கோணுமா?

  • நின்ற மரத்தில் நெடுமரம் போனால் நின்ற மரம் நெடுமரம்

  • காற்றிலே அம்மி பறக்கும் போது இலவம் பஞ்சுக்கு எங்கே கதி

  • சான்றோர் கயவருக்குரையார் மறை (மறை- இரகசியம்)

  • அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்

  • உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டது போல

  • தன்னூருக்கு ஆனை அயலூருக்குப் பூனை

  • திருடின நெல்லுக்கு மத்தளம் மரக்கால்

  • அன்னைக்கு உதவாதவன் ஆருக்கும் உதவான்

  • இராசா வீட்டுக் கோழிமுட்டை குடியானவனின் அம்மியை உடைத்ததாம்

  • கூரையேறி கோழி பிடிக்கமாட்டாத குருக்களா வானமேறி வைகுந்தம் காட்டுவார்?

  • எட்டாப் பூ தேவருக்கு எட்டும் பூ தங்களுக்கு

  • கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு

  • ஆ வேறுருவினதாயினும் பால் வேறுருவினதாமோ?

  • பகுத்தறிவில்லாத அறிவு பாரமில்லாத கப்பல்

  • தமரை இல்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு

  • இலையின் வீழ்ச்சி வாழ்க்கையின் இரகசியம்


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More