சாப்பிடும் போது கறி போன்றவை கொட்டுப் பட்டு ஆடைகளில் கறை படிந்தால் அதனை உடனடியாக பற்பசை- Tooth Paste போட்டுத் தேய்த்துக் கழுவினால் கறை போய்விடும் எனவே கறை விழுந்த இடத்தில் சிறிதளவு Tooth Paste - பற்பசையைப் இட்டு நன்றாக தேய்த்து சுடுதண்ணீரில் கழுவினால் அந்தக் கறை நீங்கிவிடும். ஆனால் சாயம் போகும் ஆடைகளாக இருந்தால் கவனமாக கழுவவும் ஏனெனில் துணியின் சாயமும் சேர்ந்து நீங்கி அவ்விடத்தில் நிறம் மெல்லியதாக மாறவும் காரணமாகிவிடும்.
பற்களிலிருக்கும் கறையையே போக்குதாம் ஆடைகளில் இருக்கும் கறையைப் போக்காதா என்ன.