பின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி' என்ற பாரதியார் பாடலைக் கேட்கும் போது மிக அருமையாக உள்ளது.
இதோ பாரதியாரின் கவி வரிகள்.....
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ (ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் (ஆசை)
கண்கள் புரிந்து விட்ட பாவம் உயிர்
கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்களிடத்தில் இது போலே ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ (ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி (ஆசை)