தமிழில் ஆண்டு நிறைவு - Anniversary


பொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர விழா என்றும், 75 வது பவள விழா என்றும், 100  வது நூற்றாண்டு விழா என்றும் கூறுவது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இவற்றுக்கு இடையில்  நாம் வழமையாக பாவிக்க பல ஆண்டு நிறைவுப் பெயர்கள் உண்டு. அவை என்ன என்று பார்க்கலாமா?
1 ஆண்டு – காகித விழா
2 ஆண்டு – பருத்தி விழா
3 ஆண்டு – தோல் விழா
4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு – மர விழா
6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு – வெண்கல விழா
9 ஆண்டு – மண் கலச விழா
10 ஆண்டு – தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு – எஃகு விழா
12 ஆண்டு – லினன் விழா
13 ஆண்டு – பின்னல் விழா
14 ஆண்டு – தந்த விழா
15 ஆண்டு – படிக விழா
20 ஆண்டு – பீங்கான் விழா
25 ஆண்டு – வெள்ளி விழா
30 ஆண்டு – முத்து விழா
40 ஆண்டு – மாணிக்க விழா
50 ஆண்டு – பொன் விழா
60 ஆண்டு – வைர விழா
75 ஆண்டு – பவள விழா
80 ஆண்டு - அமுத விழா
100 ஆண்டு – நூற்றாண்டு விழா

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More