ஞமலி என்றால் என்ன தெரியுமா?


நாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன. அவை: 

ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. 

இவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். 

சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய, ஒல்லியாய், உயரமாய், கழுத்து நீண்ட நாய்.

சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய்.

தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. 

வங்கு என்பது புள்ளியுடைய நாய்.

அட! இனிமேல் யாரையாவது ஏச வேண்டும் என்றால்..."நீங்க ஒரு ஞமலி" என்று சொன்னால் அர்த்தம் புரியும் வரை உங்களைப் பிழையாக நினைக்க மாட்டார்கள்!!!!!!!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More