Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

Lehenga Saree - லெகெங்கா புடவைகள்


புடவைகள் பல விதம். பல விதங்களில் இதனை அணியலாம். பல தேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த புடவை அணிவது என்பது எல்லோருக்கும் கை வந்த கலை அல்ல. இதனாலேயே பல விதங்களில் ரெடிமேட் புடவைகள் இலகுவாக அணியக்கூடிய வகையில் விற்பனையாகின்றன. இவற்றில் இலகுவாக மட்டுமல்ல அழகாகவும் அணியக்கூடிய வகையில் இருக்கும் புடவை வகைகளில் ஒன்றுதான் லெகெங்கா புடவைகள். அவற்றில் சில....
ஞமலி என்றால் என்ன தெரியுமா?


நாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன. அவை: 

ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. 

இவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். 

சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய, ஒல்லியாய், உயரமாய், கழுத்து நீண்ட நாய்.

சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய்.

தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. 

வங்கு என்பது புள்ளியுடைய நாய்.

அட! இனிமேல் யாரையாவது ஏச வேண்டும் என்றால்..."நீங்க ஒரு ஞமலி" என்று சொன்னால் அர்த்தம் புரியும் வரை உங்களைப் பிழையாக நினைக்க மாட்டார்கள்!!!!!!!

ஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா


பின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி' என்ற பாரதியார் பாடலைக் கேட்கும் போது மிக அருமையாக உள்ளது.
இதோ பாரதியாரின் கவி வரிகள்.....


ஆசை முகம் மறந்து போச்சே -இதை

யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்

நினைவு முகம் மறக்கலாமோ (ஆசை)


கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்

கண்ணனழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் - அந்த

நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்  (ஆசை)


கண்கள் புரிந்து விட்ட பாவம் உயிர்

கண்ணன் உரு மறக்கலாச்சு

பெண்களிடத்தில் இது போலே ஒரு

பேதையை முன்பு கண்டதுண்டோ (ஆசை)


தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்

சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த

வையம் முழுதுமில்லை தோழி (ஆசை)

அனார்க்கலி ஸ்டைல் - Anarkali Salwar Kameez

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைகள் உண்டு.  அனார்க்கலி ஸ்டைல் பலருக்கும் பிடித்ததாக இருக்கின்றது.

அதில் சில அழகான 2013/14 ஆம் ஆண்டுகளுக்கான ஸ்டைல்கள் இதோ....

Hair Design - தலைமுடி அலங்காரம்

தலைமுடி என்பது எம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான அழகைத் தரும் ஒரு விடயமாக இருக்கின்றது. தலைமுடி இல்லாமல்  மொட்டையடித்து இருக்கும் விதமும் சிலருக்கு அழகுதான். சரி என்ன சொல்ல வாறீங்க என்று கேக்கிறீங்களா...தலைமுடியை எப்படி உதிராம பார்க்கலாம் , இல்லாட்டி எப்படி அழகு படுத்தாலாம் என்றெல்லாம் பலரும் பலவிதமாக இணையத்தளங்களில சொல்லி இருக்கிறாங்க. இன்றைக்கு நாங்க தலைமுடியைக் கொண்டு எப்படி வித்தியாசமா எல்லாம் டிசைன் பண்ணிருக்காங்க என்று பார்க்கலாமா......எப்புடி எல்லாம் வித்தியாசமா யோசிக்கிறாங்க பார்த்தீங்களா.......Some Mehndi Design For Ladies

மருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தது...பின்பு நகச் சாயங்களைப் (Nail Polish) பூசும் வழக்கமே அதிகமாக இருந்து வந்தது, இன்றும் இருக்கின்றது. ஆனால் Mehndi எனப்படும் இந்த மருதானியை அழகான டிசைன்களில் கை, கால்களில் பூசும் வழக்கம்  அரேபிய பெண்கள் மற்றும் வட இந்திய பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது எனலாம். பிற்காலங்களில் இந்த நடைமுறை பலரிடம் காணப்படுகின்றது. இன்று மெஹந்தி பூசுவது என்பது திருமணங்களின் முக்கிய சடங்ககுளில் ஒன்றாக உள்ளது. எனவே இதன் டிசைன்களும் அழகழகாக மாறிக்கொண்டே இருக்கின்றன.. இதோ சில மெஹந்தி டிசைன்கள்.....

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More