இன்றைய காலகட்டத்தில் பல தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றன? என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். நல்ல பயனுள்ள, அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளோடு பொழுது போக்கினைத்தரக்கூடிய நிகழ்ச்சிகளை எத்தனை தமிழ் ஊடகங்கள் தருகின்றன? அண்மையில் YouTube ஊடாக வேந்தர் தொலைக்காட்சியின் (Vendhar TV) நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் பல நிகழ்ச்சிகள் பயனுள்ள தகவல்களைத்தரும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. அதில் மருத்துவ ரீதியாக பல சந்தேகங்களைப் போக்கின்றது Hello Doctor நிகழ்ச்சி, மற்றும் புத்தம் புது காலை நிகழ்ச்சியில் வரும் சுகமான சுமைகள் மற்றும் தாயின் மடியில்...