Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

ஒஸ்டியோ ஆத்திரைடீஸ் Osteoarthritis (Arthritis or Joint Pain)

ஆத்திரைடீஸ் பலருக்கு இருக்கும் பிரச்சினை... மூட்டுக்களை பாதிக்கச் செய்து பலமான வலிகளையும் ஏற்படுத்துகிறது. இது எங்களை இயல்பாக இயங்கவிடாமல் கஷ்டப்படுத்துகிறது. இதில் பல வகை இருக்கின்றது. இன்றைக்கு நாங்க ஒஸ்டியோ ஆத்திரைடீஸ் பற்றிப் பார்க்கலாம்.

வயது போனவர்களை இது அதிகம் தாக்குகிறது.

அறிகுறிகளைப் பார்த்தால் பாதிக்கப்பட்ட மூட்டுக்கள் உள்ள பகுதி வீங்கிவிடுவதும்...தொடும் போது வலிப்பதும் அசைக்கும் போது விரிசல் ஏற்படும் அல்லது வெடிப்பு உடையும் சத்தம் கேட்டல் அந்தப் பகுதியைச் சுற்றி கடினமான இறுக்கமான தன்னை காணப்படுதல் மூலம் கண்டுகொள்ளலாம்.

மூட்டுகளுக்கிடையில் இருக்கும் குருத்தெலும்புகளின் தசைநார்கள் தேய்ந்து போகின்றமையே இதற்குக் காரணம். இதனால் எலும்பு மூட்டுகளுக்கிடையில் உராய்வு அதிகம் ஏற்பட்டு வலியை உண்டுபண்ணுகிறது. இதனால் ஏற்படுவதுதான் இந்த ஆஸ்டியோத்திரைட்டீஸ். சிலருக்கு பரம்பரையாகவும் வருகிறது. இது தவிரவும்….

அதிக உடல்பருமன்

விபத்துக்கள் ஏற்படல்

அதீத உடற்பயிற்சி மேற்கொள்ளல் போன்றவற்றாலும் இது ஏற்படுகிறது.( அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல எதுவுமே நஞ்சுதான்...)

இதன் வலியைக் குறைப்பதற்கு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு என்ன செய்யலாம் என்பதை இப்ப பார்க்கலாம்...

01

தோலோடு சிறிய துண்டுகளாக்கப்பட்ட உருளைக் கிழங்கை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் உருளைக் கிழங்கு ஊறவைத்த தண்ணீரைக் குடிக்கவும்.

02

ஒரு கப் மஸ்டட் ஒயில் (கடுகு எண்ணை), பத்து கிராம் அளவு கற்பூரம் சேர்த்து அடுப்பில் வைத்து கற்பூரம் முழுதாக கரையும் வரை ஹீட் பண்ணவேண்டும். பின்னர் அந்த எண்ணையை இளஞ்சூட்டுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பூசி மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் இதனை செய்ய வேண்டும்.

03

ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை எடுத்து நூறு மில்லி லீற்றர் தண்ணீரில் ஊறவைத்து அடுத்தநாள் காலை எள்ளுடன் சேர்த்து அதை அப்படியே குடிச்சிடுங்க...

04

ஒரு தேக்கரண்டி கறுவா பவுடரோடு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து நன்றாக மிக்ஸ் பண்ணி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும் இவற்றை ஒருமாதம் தொடர்ந்து செய்து வாருங்கள்...நீங்களே வித்தியாசத்தை காணுவீங்க....

உழைப்பின் மகிமை கூறும் பொன்மொழிகள்

 1. உழைப்பே மகிழ்ச்சிக்குத் தந்தையாகும். -பிரான்ஸ்

 2.  உழைத்தலே பிரார்த்தனை செய்தல். -இலத்தீன்

 3.  உழைப்பு கல்லிலிருந்துகூட ரொட்டியை உண்டாக்கும். -ஜெர்மனி

 4.  உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது. -இங்கிலாந்து

 5.  உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு. -கிரீஸ்

 6.  நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது. -பல்கேரியா

 7.  உறங்குகின்ற சிங்கத்தைவிட அலைகின்ற நரி மேலானது. -துருக்கி

 8.  அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை. -சீனா

 9.  அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான். -இந்தியா

 10.  மனிதன் உழைக்கிறான்; இறைவன் வாழ்த்துகிறான். -அமெரிக்கா

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More