Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

இலையிலே கலைவண்ணம்


கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பது பாடல். அது போல இதனை இலையிலே கலைவண்ணம் கண்டான் எனப் பாடலாம். ஒவ்வொருவரின் சிந்தனை ,புத்தாக்கத் திறன் என்பவை எவ்வளவு வித்தயாசப்படுகின்றன. இதிலுள்ள சாதாணமாக நாம் பார்ககும் இலைகள் எவ்வளவு அழகான  உயிரினங்களாக மாறியுள்ளன. அழகு.









படைப்புக்கள் பலவிதம் - Kristina Webb


இந்தப் படங்களைப் பார்க்கும் போதே மிகவும் அழகாக இருக்குதே யார் இதைச் செய்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்ற கூகிளில் தேடும் போதுதான் இந்தப் படைப்பாளி பற்றிய தகவல்களை அறியக் கிடைத்தது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா வெப் என்பவர் தான் அந்தக் கலைஞர். இன்ஸ்டகிராமில் தனது அழகான இந்த படைப்புக்களை இடுவதன் காரணமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் இவரைப் பின்தொடர்கின்றனர். அத்தோடு இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் பற்றிய மேலதிக விபரங்களை அவரின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.





Creative Idea

சில விடயங்களைப் பார்க்கும் போதுதான் "அட" என்ற எண்ணத்தை எம்முள் ஏற்படுத்தும். அதுவும் நாளார்ந்தம் நாம் பார்க்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை வேறு விடயங்களில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால்  ஏன் இந்த Idea எல்லாம் எமக்கு வரவில்லை என்ற கேள்வி மனதினுள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கே தரப்படும் படங்களைப் பார்த்தால் எமக்குள் அந்தக் கேள்வி எழுவது நிச்சயம்.












டுட்டு ஆடை - Tutu Dress


தையற்கலை என்பது எல்லோராலும் செய்ய முடியாதது. ஆனால் சிலருக்கு அது கைவந்த கலை. ஐய்யையோ எனக்கு தைக்க வராதே என்பவர்களும் முயற்சி செய்து பார்க்கக் கூடிய ஒரு முறை டுட்டு (Tutu)ஆடை வடிவமைக்கும் முறை. தையல் வாடையே படாமல் கோர்த்துக் கட்டுவது மற்றும் ஒட்டுவது ஆகிய முறைகளின் மூலம் இந்த வகை ஆடைகளை உருவாக்கலாம். ஆனால் உங்களுக்கு கற்பனைத்திறன், நிறங்களின் ஒத்திசைவு, பொறுமை, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும் . அவ்வாறாயின் இந்த டுட்டு ஆடைமுறை உங்களுக்கு கைவந்த கலைதான்.








தமிழில் ஆண்டு நிறைவு - Anniversary


பொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர விழா என்றும், 75 வது பவள விழா என்றும், 100  வது நூற்றாண்டு விழா என்றும் கூறுவது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இவற்றுக்கு இடையில்  நாம் வழமையாக பாவிக்க பல ஆண்டு நிறைவுப் பெயர்கள் உண்டு. அவை என்ன என்று பார்க்கலாமா?
1 ஆண்டு – காகித விழா
2 ஆண்டு – பருத்தி விழா
3 ஆண்டு – தோல் விழா
4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு – மர விழா
6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு – வெண்கல விழா
9 ஆண்டு – மண் கலச விழா
10 ஆண்டு – தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு – எஃகு விழா
12 ஆண்டு – லினன் விழா
13 ஆண்டு – பின்னல் விழா
14 ஆண்டு – தந்த விழா
15 ஆண்டு – படிக விழா
20 ஆண்டு – பீங்கான் விழா
25 ஆண்டு – வெள்ளி விழா
30 ஆண்டு – முத்து விழா
40 ஆண்டு – மாணிக்க விழா
50 ஆண்டு – பொன் விழா
60 ஆண்டு – வைர விழா
75 ஆண்டு – பவள விழா
80 ஆண்டு - அமுத விழா
100 ஆண்டு – நூற்றாண்டு விழா

இயற்கையின் காதல்


காதலர் தினம் உலகளாவிய  ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்கிய அம்சம் இதயம். ஒரு மனிதனின் உயிர் வாழ்விற்கு  இதயம் எவ்வளவு தூரம் அத்தியவசியமானதோ அதே அளவிற்கு இயற்கையும் அத்தியவசிமானதே. இயற்கையின் மீது நாம் ஒவ்வொருவரும் காதல் கொண்டால் இந்த பூமி வளமாகவும், அழகாகவும் , அமைதியாகவும் இருக்கும் . என்னடா? காதலர் தினம் என்று தொடங்கிவிட்டு இயற்கையோடு சங்கமமாகி விட்டோமே என்று யோசிக்கிறீங்களா?.  இதுதான் விடயம். இந்த இயற்கை காதலின் முக்கிய அம்சமான இதயத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தியுள்ளது என்று பார்க்க படங்களைப் பாருங்கள். இது இயற்கையின் காதல்!




















Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More