தையற்கலை என்பது எல்லோராலும் செய்ய முடியாதது. ஆனால் சிலருக்கு அது கைவந்த கலை. ஐய்யையோ எனக்கு தைக்க வராதே என்பவர்களும் முயற்சி செய்து பார்க்கக் கூடிய ஒரு முறை டுட்டு (Tutu)ஆடை வடிவமைக்கும் முறை. தையல் வாடையே படாமல் கோர்த்துக் கட்டுவது மற்றும் ஒட்டுவது ஆகிய முறைகளின் மூலம் இந்த வகை ஆடைகளை உருவாக்கலாம். ஆனால் உங்களுக்கு கற்பனைத்திறன், நிறங்களின் ஒத்திசைவு, பொறுமை, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும் . அவ்வாறாயின் இந்த டுட்டு ஆடைமுறை உங்களுக்கு கைவந்த கலைதான்.