காதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்கிய அம்சம் இதயம். ஒரு மனிதனின் உயிர் வாழ்விற்கு இதயம் எவ்வளவு தூரம் அத்தியவசியமானதோ அதே அளவிற்கு இயற்கையும் அத்தியவசிமானதே. இயற்கையின் மீது நாம் ஒவ்வொருவரும் காதல் கொண்டால் இந்த பூமி வளமாகவும், அழகாகவும் , அமைதியாகவும் இருக்கும் . என்னடா? காதலர் தினம் என்று தொடங்கிவிட்டு இயற்கையோடு சங்கமமாகி விட்டோமே என்று யோசிக்கிறீங்களா?. இதுதான் விடயம். இந்த இயற்கை காதலின் முக்கிய அம்சமான இதயத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தியுள்ளது என்று பார்க்க படங்களைப் பாருங்கள். இது இயற்கையின் காதல்!