"எந்தவொரு மிகச்சிறந்த வேலையும் முதலில் முடியாததாகத்தான் இருக்கிறது" இந்தக் கருத்தைக் கூறியவர் வரலாற்று அறிஞர் தோமஸ் கார்வெல். 'முடியும் என்னால் முடியும்' , முடியும் என்று நம்பினால் எதுவும் முடியும்! முடியாதது என்று இங்கு எதுவுமில்லை! எனவே "முடியும்" என்ற மந்திரச் சொல்லை மனதிற்குள் எண்ணியபடி முடியும் என்ற விதையுடன் எதையும் தொடங்கித் தொடர்ந்தால் இந்த பூமிப் பந்தின் கீழ் எதுவும் முடியும்.
தமிழில் மிக அற்புதமான சொல் ... சாதாரண மனிதனையும் சாதனை மனிதனாக மாற்றும் சொல் ....உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் சொல்... மாற்றங்களைப் புரியும் சொல்.. அந்தச் சொல்....
தன்னம்பிக்கை!
இந்தச் சொல்தான் சாதாரண மனிதனிடம் இருந்து சாதனையாளனை உருவாக்குகின்றது!