பழங்கள் சுவையானவை, சத்தானவை, அழகானவை. அதுமட்டுமல்லாமல் அழகைத் தருபவையும் கூட.
பொதுவாக பழங்களின் பல நன்மைகள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் அவை அழகைக் கூட்டும் விதமாக எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்று பார்க்கலாம்.
பொதுவாகவே பப்பாளிப் பழம் இயற்கை பிளிச்சாக பயன்படுகின்றது. பப்பளிப் பழத்தை எடுத்து நன்றாக மசித்து கூழாக்கிக் கொண்டு அதனை முகத்தில் பூசி 15 நிமிடங்களின் பின்பு கழுவி விட்டால் நாளடைவில் முகச் சருமம் பொலிவு பெறும்.
வாழைப் பழத்தை எடுத்து அதனை சிறிது பால்விட்டு மசித்து பசையாக்கிக் கொண்டு பின்னர் சிறிதளவு தேனும் கலந்து அந்தக் கலவையை முகத்தில் பூசி பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளலாம்.
பட்டர் புருட் பழம் எழுத்து அதனை பால் விட்டு மசித்து முகத்தில் பேஸ் பக் போல் போட்டு காய்ந்தவுடன் கழுவிக் கொள்ளலாம்.
தோடம்பழ சாறு பிழிந்து அதனை பிரிஜ்ஜில் வைத்து கட்டயாக்கி கொண்டு பின்பு அதனை துணி ஒன்றில் சுற்றி முகத்தை துடைத்துக் கொண்டால் முகம் குளிர்ச்சியடையும்.
பேரிச்சம் பழம் எடுத்து அதனை இரவு தண்ணீரில் ஊற போட்டு பின்பு காலைவேளை அதனை நன்றாக மசித்து முகத்தில் பூசி பின்பு கழுவி விடலாம்
இது தவிரவும் எந்த பழமாக இருந்தாலும் நாம் அதனை முகத்தில் பூசி சிறிது நேரம் விட்டு கழுவிக் கொண்டால் அது சருமத்திற்கு அழகையும் ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியையும் கொடுக்கும்.