Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில் இருக்கும் .அநேகமானோர் அதனையே கடைப்பிடிக்கின்றோம். சிலர் காலத்திற்கு ஏற்றவாறு Fashion ல் பின்னியெடுத்துடுவாங்க. ஆனா சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் இதுதான் Fashion என்று கூறிக்கொண்டு Fashion யும் கெடுத்து தங்களையும் கெடுத்து வைத்திருப்பார்கள். சரி இதில் நீங்க எப்படி... பின்னியெடுக்கிற வகையா இல்லை கெடுக்கிற வகையா?
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பார்த்தால் தங்க நகைளை விரும்பி அணிவதை விட பெண்கள் அதிகமாக Fancy நகைகளையே விரும்பி அணிகின்றனர். இதற்கு முக்கிய காரணம் செலவு குறைவு. ஆடைகளுக்கு ஏற்ற விதத்திலே கலர் கலரா நகைகள் அணியலாம். அதிலும் பல விதமான Fancy நகைகள் இருக்கின்றன. மற்றும் கள்வர் பயமில்லை, போன்ற பல காரணங்களைக் கூறலாம்.
இவ்வாறே புடவைகளிலும் இப்பொழுது Fancy புடவைகளுக்கு மவுசு அதிகம். Stone வேலைப்பாடு, String வேலைப்பாடு, Patch வேலைப்பாடு, Beads வேலைப்பாடு, Gliter வேலைப்பாடு, Cord வேலைப்பாடு, கண்ணாடி வேலைப்பாடு, Sequine வேலைப்பாடு , Net வேலைப்பாடு போன்ற பல வகைகள் இருக்கின்றன.
எவை எப்படி அழகான பொருட்களாக இருந்தாலும் கூட எமக்கு எது பொருந்துமோ அதனை தெரிவு செய்ய எமக்கு தெரிய வேண்டும் . அல்லாவிட்டால் எவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாம் அணிந்திருந்தாலும் அழகாக தெரிய மாட்டோம். எனவே Fashion என்பது எமக்கு பொருந்துகின்றதா என்று பார்த்து நாம் கைக்கொண்டால் எமது அழகை அது பன்மடங்காக்கி விடும்.