Nail Art

உங்களின் நகங்கள் எப்படி? நன்றாக நகம் வளர்த்து Shape செய்து Nail Polish  எல்லாம் அடித்து அழகுபடுத்தி வைத்திருக்கின்றீர்களா? ஆம் என்றால் ஓகே. இல்லை என்றால் இனிமேல் அவ்வாறு செய்து கொள்ளலாம். உங்களுக்கு Nail Polish அடிக்க விருப்பமில்லை என்றால் நீங்கள் நகத்தை மட்டும் அளவாக உங்களுக்கு பிடித்த அளவு வளர்த்து அதனை Shape செய்து அழகுபடுத்தலாம். இல்லை Nail Polish அடிப்பது பிடிக்கும் ஆனால் அதற்கு நேரமில்லை அல்லது வேலைமினக்கிட்ட வேலை என்று நினைத்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். மேற்கத்தேய நாடுகளில் எல்லாம் பார்த்தால் இந்த நகங்களுக்கு வித விதமாக Nail Polish அடித்து அதனை அழகு படுத்துவது என்பது Nail art எனப்படுகின்றது.

இந்த முறையில் சிறிய நகத்தில் மிக பெரிய அளவில் ஓவியம் வரையும் தன்மை அதிகரித்து விட்டது. அது மிக அழகாக இருக்கின்றது. சிலர்தான் தமக்கு பொருந்தாத வகையில் அதனை வரைந்து அதன் அழகை எரிச்சல் படவைத்து பார்க்கும் எங்களையும் இதெல்லாம் தேவைதானா என்று சிந்திக்க வைத்து விடுகின்றது. ஆனால் அழகான முறையில் Nail art செய்து பாருங்கள் மிக அழகாக இருக்கும். இதனை நாம் எமது வீட்டில் வைத்தே செய்ய முடியும். எம்மிடம் இருக்கும் Nail Polish கொண்டு நாம் அலங்காரப்படுத்த முடியும். இது எமது கற்பனையில் தான் இருக்கின்றது. இதகான் Tools எம்மிடம் இருந்தால் எமது கற்பனைக்குதிரையை தட்டி விடவேண்டியதுதான். அவ்வாறு Tools  இல்லை எனினும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை எம்மிடம் இருக்கும் Brush வகைகளை கொண்டு அதற்கேற்ப நகங்களை அழகு படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் Tooth pick கொண்டும் அழகுபடுத்த முடியும். இவை எல்லாவற்றிற்கும் முக்கியம் முயற்சி, பொறுமை, கற்பனை வளம்.





Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More