பழமொழி சொன்னா ஆராயக்கூடாது...... அனுபவிக்கோணும்....

வாழ்க்கையில் நாம் எல்லோருமே பழமொழிகளைக் கேட்டிருப்போம், வாசித்திருப்போம் அல்லது சொல்லியிருப்போம். ஆனால் தொடர்ச்சியாக ஒரு சில பழமொழிகள்தான் அடிக்கடி பாவிக்கப்படுகின்றன. எனவே சில பழமொழிகளை வாசிக்கும் போது வித்தியாசமாக பட்டது. சரியென்று வலைப்பதிவில் இட்டுவிட்டேன். இவற்றை வாசிக்கும் போது பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் சொல்வது போல் பழமொழி சொன்னா ஆராயக்கூடாதுடா.. அனுபவிக்கோணும்...சரியா...



  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்க கெடும்

  • பசித்தவன் மேல் நம்பிக்கை வையாதே

  • கரும்பும் எள்ளும் கசக்கினால் பலனாகும்

  • வீணை கோணினாலும் நாதம் கோணுமா?

  • நின்ற மரத்தில் நெடுமரம் போனால் நின்ற மரம் நெடுமரம்

  • காற்றிலே அம்மி பறக்கும் போது இலவம் பஞ்சுக்கு எங்கே கதி

  • சான்றோர் கயவருக்குரையார் மறை (மறை- இரகசியம்)

  • அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்

  • உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டது போல

  • தன்னூருக்கு ஆனை அயலூருக்குப் பூனை

  • திருடின நெல்லுக்கு மத்தளம் மரக்கால்

  • அன்னைக்கு உதவாதவன் ஆருக்கும் உதவான்

  • இராசா வீட்டுக் கோழிமுட்டை குடியானவனின் அம்மியை உடைத்ததாம்

  • கூரையேறி கோழி பிடிக்கமாட்டாத குருக்களா வானமேறி வைகுந்தம் காட்டுவார்?

  • எட்டாப் பூ தேவருக்கு எட்டும் பூ தங்களுக்கு

  • கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு

  • ஆ வேறுருவினதாயினும் பால் வேறுருவினதாமோ?

  • பகுத்தறிவில்லாத அறிவு பாரமில்லாத கப்பல்

  • தமரை இல்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு

  • இலையின் வீழ்ச்சி வாழ்க்கையின் இரகசியம்


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More