பறவைகளில் ஒன்று மைனா..இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்திய திரைப்படங்களிலும் தரமான படங்களில் ஒன்று மைனா என்பது படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். மிகத் தரமான படம். உண்மையில் சாதாரண ஒரு கதைதான் ஆனால் அந்த கதையை சிறப்பாக எடுத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக நடித்திருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. என்னடா படம் நன்றாக இருக்குது என்று சொல்லிட்டு சிறப்பா நடிக்கேல என்று சொல்றன் என்று யோசிக்காதீங்க.....உண்மையில் ஒவ்வொருவரும் காதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறாங்க என்று சொல்ல வேண்டும். இயல்பாக வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகில் எல்லாருமே பாராட்டும் படமாக அமைந்திருக்கின்றது மைனா. படத்தில் நகைச் சுவைக்கும் குறைவில்லை. அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் மைனா