பழநிபாரதியின் காதலின் பின்கதவு

சினிமாவில் பாடல்களை எழுதும் கவிஞர் பழநிபாரதியின் காதலின் பின்கதவு என்ற கவிதைத் தொகுப்பை வாசித்த போது எல்லா கவிதைகளுமே சிறப்பாக காணப்பட்டன. அவற்றில் சில இதோ...

இசைத்தட்டின் ஞாபகத்தில்

கடிகாரத்தில் படுத்துக்கிடக்கும்

முட்கள் நாம்'

இன்று பிறந்த குழந்தைக்கு....

உனக்காக வைத்திருந்த

முத்தத்தில்

ஃப்ளோரைட் வாசம்....

உனக்காக பறத்த பூவில்

டீசல் தூசி...

உனக்காக வாங்கிய

வாழ்த்து அட்டையில்

மரத்தின் இரத்தம்....

எனது உலகத்திலிருந்து

எதுவுமில்லை உனக்கு....

காற்றை

அழுக்குப்படுத்தாமல் ஓடும்

உனது குட்டிக் கார்.....

வன்முறை அறியாத

இராணுவ வீரன்.....

சிரிக்க கற்றுக்கொடுக்கும்

சீனத் தங்கை....

விபத்துக்களைச் சந்திக்காத

விமானம்

ரயில்......

மதங்களற்ற

உனது பொம்மைகளின்

உலகத்திலிருந்து

முடிந்தால் கொடு

எனக்கொரு சிரிப்பை........

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More