உங்களைச் சூழ உள்ளவர்கள் எப்படியான சிந்தனை கொண்டவர்கள்???? பொசிடிவ் சிந்தனையா? அல்லது நெகட்டிவ் சிந்தனையா? இதுவும் உங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.. இதோ அதற்கான சிறு கதை.....
ஒரு நாள் தவளைகள் சிலவற்றிற்கு தாம் வாழும் ஊரில் உள்ள கோயில் கோபுரத்தில் ஏற வேண்டும் என்ற ஆசை வந்ததாம். சரியென்று அந்த தவளைகள் எல்லாம் கோவில் அடிக்குச் சென்று ஏற முயற்சி செய்தனவாம். இதைப்பார்த்த அந்த கோவிலில் நின்ற மனிதர்கள் எல்லாம் சொன்னார்களாம், நீங்க தவளைகள் உங்களால் இதை செய்ய முடியுமா? உங்களுக்கு இது தேவைதானா? என்று. இருந்தாலும் தவளைகள் தங்களால் முடியும் என்று நினைத்து தத்தித்தத்தி தாவினவாம்... மீண்டும் .. மீண்டும் ...அங்கிருந்த மக்கள் நீங்கள் தவளைகள் உங்களால் இந்த கோபுரத்தில் ஏறமுடியாது....இந்த கோபுரத்தின் உயரமென்ன? உங்களின் அளவென்ன...இது உங்களால் முடியாது...தேவையில்லாமல் கஷ்டப்பட போறீங்கள்...என்று கூறிக்கொண்டே இருந்தார்களாம். தவளைகளும் முயற்சி செய்து பார்த்து பார்த்து மனிதர்கள் சொன்னதையும் யோசித்து தங்களால் இந்த உயரமான கோபுரத்தில் ஏறமுடியாது என்று எண்ணி முயற்சியை கைவிட்டு விட்டனவாம். ஆனால் ஒரு தவளை மட்டும் தத்தித் தத்தித் தாவி ஏறி ஏறி கோபுரத்தை அடைந்ததாம். என்னடா எப்படி அந்த தவளை மட்டும் சென்றடைந்தது என்று பார்தால் அந்த தவளைக்கு காது கேட்காதாம்!!!!! எனவே மனிதர்கள் சொன்ன வார்த்தைகள் ஒன்றும் அதற்கு விளங்கவில்லை. அது தன்னால் இலக்கை முயற்சித்து அடைந்து விட்டது. எனவே நாங்களும் எங்கள் இலக்கு என்ன என்பதை சரியாக தீர்மானித்து விட்டால் வேறு விடங்களினால் அதனை தடைப்படவிடாமல் பார்த்துக் கொண்டால் இலக்கு என்பது இலகு.