இந்தப் படங்களைப் பார்க்கும் போதே மிகவும் அழகாக இருக்குதே யார் இதைச் செய்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்ற கூகிளில் தேடும் போதுதான் இந்தப் படைப்பாளி பற்றிய தகவல்களை அறியக் கிடைத்தது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா வெப் என்பவர் தான் அந்தக் கலைஞர். இன்ஸ்டகிராமில் தனது அழகான இந்த படைப்புக்களை இடுவதன் காரணமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் இவரைப் பின்தொடர்கின்றனர். அத்தோடு இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் பற்றிய மேலதிக விபரங்களை அவரின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.