நாட்டாமை Please STOP ப்பு

நல்லா கெளப்புறாரு பீதிய....

நடிக்க வந்ததிலிருந்தே ஒஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. (நல்லா கனவு காணுங்க யாரு வேணாண்ணு சொன்னது)

எப்படியாவது ஒஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று. (நல்லா தேர்ந்தெடுங்க 1977, ஜக்குபாய் மாதிரி)

நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.

இப்போது நான் பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் (முதல்ல வாய்ப்பு வரட்டும்) பண்ணுவேன். நிச்சயம் ஒஸ்கர் வெல்வேன்.... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா........

ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஒஸ்கர் வெல்லலாம்.

Mr நாட்டாமை Please STOP ப்பு...இதென்ன சின்னப்புள்ளத்தமா இருக்கு....

ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் Hollywood படம் ஒன்றில அமெரிக்க காரன விட திறைமைசாலியா Perform பண்ணி ஒஸ்கார் வாங்கியிருக்காங்க, ஆனா நீங்க என்னடான்னா.. ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் அந்த விருதினை கொடுக்கிற மாதிரியும், ஏதோ பொடி நடையாபோய் அந்த விருத வாங்கிட்டு வாற மாதிரியும் கத விடுறீங்க....

ஒஸ்கார் அமெரிக்க படங்களுக்கு, அமெரிக்கன் கொடுக்கிற விருது... இதத்தான் கமல் காலா காலமா செல்லிக் கொண்டு வாறாரு... இந்திய படங்களுக்கு பெரிய விருது, இந்திய தேசிய விருது அத முதல்ல வாங்க try பண்ணலாமே...

ஏப்பு தரைய விட்டுப்புட்டு ஆகாயத்தில போய் விவசாயம் பண்ண கணவு கண்டுக்கிட்டு... எங்களுக்கும் பீதிய கௌப்புறீங்க.....

Mr Sarath you are a good and handsome hero.... mean time don't imagine un wanted things.....

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More