மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
ஒவ்வொரு குழந்தையையும் பத்து மாதம் கருவறையில் சுமந்து, இவ் உலகத்தைப் காட்டுபவள் தாய் என்னும் பெண்
sivany.blogspot.com உலக பெண்களுக்கு தனது அனைத்துலக பெண்கள் தின வாழ்த்துக்களைச் தெரிவித்துக் கொள்கின்றது.
இன்றைய இந்த தினத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தவை....
கதரின் பிக்லோ, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கர் விருதினைப் பெற்றுள்ளார் .
ஒஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்ற முதல் பெண் கதரின் பிக்லோதான் என்பது, பெண்கள் தினமான இன்று அனைத்து பெண்களையும் பெருமைப்படுத்தும் ஓர் விடயமாகும்.
சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், அவை தி ஹர்ட் லொக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது.
இதேவேளை, ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் விருது கிடைக்காத அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது! (நீங்கதானே முன்ன சொன்னீங்க கதரீன் விருதுக்கு பெருத்தமான நபர் தான் என்று... இப்ப என்ன...பெருமைப்படுங்க உங்க முன்னாள் மனைவியும் இன்னாள் நன்பியும் தானே..)
அடுத்தது...
முற்று முழுதாக பெண்களால் இயக்கப்பட்ட விமானமொன்று இன்றைய தினம் சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பறந்து வரலாற்றில் சிறப்பு பதிவை மேற்கொண்டுள்ளது.
பிரதான விமானி தீபா மேத்தா, உதவி விமானி சோனியா ஜெயின், பணிப்பெண்கள் ராஜானி, பிருந்தா, தன்யா பிரசன்னா, யாமினி ஆகியோரடங்கிய இந்தக் குழுவினர் இன்று மதியம் 12. 30இற்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை இயக்கியதாகவும் இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்ததாகவும் தெரியவருகின்றது.
சர்வதேச மகளிர் தினமான இன்று இந்தியாவில் பெண்களுக்கு 33.33 வீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்நது. இருந்தாலும் அது பல குழப்பங்களுக்கு மத்தியில் அதற்கான வாகெடுப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தி... (இருக்காதா பின்ன)