பனங்காய்ப் பலகாரம்

வழமையாக  பனங்களியுடன் கோதுமை மாவைக் கலந்து பனங்காய்ப் பலகாரம் செய்வோம். ஆனால் இன்று ஆட்டா மா கலந்து  எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பனங்களி                      3/4 கப்
ஆட்டா மா                       3/4 கப்
கோதுமை மா               3/4 கப்
பால்                                 1/2 கப்
சீனி  (Brown)                 1/2 கப்
தண்ணீர்                       1/4 கப்
Baking powder                1/4 tsp
உப்பு                                2 சிட்டிகை(pinch)


செய்முறை:
மாவுடன் baking powder மற்றும் உப்புக் கலந்து விட்டு, பனங்காய்ப் பாணியுடன் சீனியைச் சேர்த்து நன்றாக கரைக்கவும். நன்கு கரைவதற்காக  தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளவும். பின் இந்த கலவையை சிறிது சிறிதாக மாவுடன் கலந்து பிசைந்து கொள்ளவும்.  இந்நேரத்தில் பாலையும் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டதன் பின்பு, மிதமான சூட்டில் கொதித்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பனங்காய்ப் பலகாரம் தயார்.







Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More