நகம் வளர்க்க சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு அந்தப் பொறுமை இருக்காது??? வெட்டி விடுவார்கள் இல்லாவிட்டால் கடித்து துப்பிவிடுவார்கள்???? அதற்கு இருக்கவே இருக்கிறது டென்ஷன். ஆனால் இதனையும் மீறி நகத்தை வளர்த்து அழகுபடுத்துவராக இருந்தாலோ இல்லை இருக்கும் நகத்தை வைத்து அழகு படுத்த விரும்பினால் கீழே உள்ள படங்களை வைத்து நீங்களே உங்கள் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். இதற்கு உங்களிடம் தேவையான வண்ணங்களில் நகப் பூச்சுக்களும் (Nail Polish) பற்குத்திக் குச்சி (Toothpick) போன்ற ஏதாவாது உங்கள் நகங்களுக்கு ஆபத்து விளைவிக்காத பொருள் இருந்தால் போதும் நீங்களே இந்த டிசைன்களைப் பார்த்த மாத்திரத்திலேயே போட்டு விடலாம்.