மன உளைச்சலைப் போக்கும் வழிகள்பம்பரமாக சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகில் பலரும் மன உளைச்சலால் அவதிப்படுகின்றனர். இது பள்ளி செல்லும் குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது.  எனவே அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்கலாம்

மனவுளைச்சலைப் போக்கும் விளையாட்டு
பெரியவராய் இருந்தாலும் சரி சிறுவராய் இருந்தாலும் சரி விளையாட்டு எம்மை மனவுளைச்சலிலிருந்து விடுபடவைக்கும். வயது வித்தியாசமின்றி நீங்கள் விளையாடலாம், அதுவும் பெற்றோர்களாக இருந்தால் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடிப் பொழுதை உற்சாகமானதாக்கலாம்.

புத்தகங்கள் வாசித்தல்
நல்ல புத்தகங்கள் நல்ல நண்பன் போன்றவை. எனவே அவற்றை வாசிக்கும் போது மனம் ஒருநிலைப் படுகின்றது, அதேவேளை புதிய விடயங்களும் எம்மை வந்தடைகின்றன.

மனம் விட்டுச் சிரித்தல்
சிரிப்பு மனிதனுக்கு அவசியம். மிருகங்களில் இருந்து நம்மை வேறுபடுத்துவது இந்தச் சிரிப்பு. மனம் விட்டுச் சிரிக்கும் போது உடல் ஆரோக்கியம் அடைகின்றது. மற்றவர்களுடன் நகைச்சுவையைக் கூறி மனம் விட்டுச் சிரிக்கும் போது அவர்களுடன் பிணைப்பும் அதிகரிக்கின்றது.

வீட்டுத் தோட்டம் 
மரங்களை நட்டு அவற்றை வளர்ககும் போது நாம் இயற்கையுடன் ஒன்றிப் போகின்றோம். பூந்தோட்டம் மூலம் மனம் அமைதியடைகின்றது.

வரைதல்
சித்திரம் , ஓவியம் வரைதல் சிறந்த மனதை ஒருநிலைப்படுத்தும் விடயம் . எங்களின் திறமையும் உணர்வுகளும் இதன் மூலம் வெளிப்படும் . 

இசை
இசையால் வசமாகா இதயமெது என்பதற்கிணங்க மனதை லயிக்கச் செய்வது இசை. மருத்துவர்களே கூறுவதைக் கேட்டிருப்போம்..நல்ல இசையை கேளுங்க மனதிற்கு நல்லம் என்று. இசை மிகப்பெரிய சக்தி வாய்ந்தது.

சிறிய சுற்றுலா
வெளியில் சுற்றுலா சென்று வருவது மனஉளைச்சலைத் தவிர்க்கும் . அதற்காக அதிக செலவு செய்து சென்றால் அந்த பணமே மேலும் மனவுளைச்சலை ஏற்படுத்திவிடும். எனவே எம்மிடம் இருக்கும் வசதிக்கேற்ப சுற்றுலா செல்வது மன அமைதியையும் அன்னியோனத்தையும் தரும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More