பந்திக்கு முந்து படைக்குப் பிந்து இது பழமொழி. இதற்குப் பல விளக்கங்கள் கூறுவார்கள். ஆனால் அதன் அர்த்தம் இவ்வாறு அமைகிறது, பந்திக்கு முந்து என்றால் ஒரு விருந்தில் முதல் பந்தி முக்கியமான, மதிப்பிற்குரியவரிகளுக்கே அளிக்கப்படும் , எனவே நீ அவ்வாறு சிறப்பு மிக்கவனாக இருக்க வேண்டும். அதேவேளை படைக்குப் பிந்து என்றால் எப்போதும் பெரிய படைத்தலைவர்கள் கடைசியாக தங்களை துருப்புச் சீட்டாகவைத்து போருக்குச் செல்வார்கள் . அதுபோல் நீயும் பெரியவனாய் இரு என்பது இதன் பொருள். எனவே இந்தப் பழமொழியின் கரு என்ன என்று பார்த்தால் எங்கும் சிறப்பிற்குரியராகவும், மதிப்பிற்குரியவராகவும் இரு என்பதாகும்.