வெற்றி

உங்களுக்கு பிடித்ததை சிறப்பாகவும், கவனமாகவும் செய்தால் வெற்றி உங்கள் வசம்

கணக்குப் பாடத்தில் திறமையற்றவராய் இருந்த சரோஜினி நாயுடு தனது 13 வது வயதில் ஆங்கிலத்தில் கவிதை எழுதினார்.

தமிழில் குறைவான மதிப்பெண்களை பெற்ற ராஜாஜிதான் எளிய தமிழில் இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றை எழுதி தமிழுக்கு சிறப்புச் சேர்த்தார்.

கொடுமையான மனைவியினைப் பெற்ற டால்ஸ்டாயும், பெர்னாட்ஷhவும் தங்கள் படைப்புக்களில் அந்தப் பாதிப்பு வராமலும் பாதிப்படையாமலும்  படைப்புக்களை சிறப்புறப் படைத்து உலகப் புகழ் பெற்றார்கள்.

இவற்றை வைத்து சிந்திக்கும் போது, எமக்கு கிடைக்காதவற்றை, சரியாக வராதவற்றை நினைத்து வருந்தாமல் எம்மால் முடிந்ததை முயற்சியோடு கவனமாகவும் சிறப்பாகவும் செய்தால் வெற்றி நிச்சயம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More