இந்தக் காலத்தில் அநேகமானவர்களுக்குப் பிடித்த உணவுவகைகள் எவை என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில்கள் பொதுவாக Chinese Foods, Thai Foods, Mongolian Foods, Italian Foods என்று மேற்கத்தேய உணவுவகைகள் தான் அதிகம் இடம்பிடிப்பதை நாம் பார்க்கலாம். அவர்களின் உணவுகளில் உணவுச் சேர்க்கைகள் என்பது எம்மிலிருந்து வேறுபட்டு நிப்பதை நாம் பாரக்கலாம். கீழத்தேய உணவுகளில் நாம் ஒரு மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படும் ஏதாவது ஒரு சாப்பாட்டுடன் கறி, சம்பல், போன்ற தொட்டுச் சாப்பிடும் வகைகளை வைத்திருப்போம். ஆனால் நாங்களும் நாளுக்கு நாள் வித்தியாசமான உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். அவ்வாறு தான் நானும் ஒரு வகை Dish முயற்சி செய்து பார்த்தேன் ..நன்றாக இருந்தது..நீங்களும் விரும்பினால் Try பண்ணிப்பாருங்க.
தேவையான பொருட்கள்
கரட் 1
வதக்கிய இறைச்சி சிறிதளவு
வறுத்த கச்சான்
தேங்காய்ப்பூ
அளவான பெரிய வெங்காயம் 1
பச்சைமிளகாய் 3
உப்பு
செய்முறை
முதலில் கோழி இறைச்சியை சிறிய துண்டுகளாக 10 அல்லது 15 துண்டுகள் அளவில் எடுத்து நன்கு மஞ்சள், கறித்தூள் , உப்பு, என்பன போட்டு பிரட்டி வைத்து பின்பு தாய்ச்சியில் எண்ணை சிறிதளவு விட்டு வதங்க விடவேண்டும் . நன்றாக இறைச்சியின் மணம் போகும் மட்டும் நன்றாக வதங்கி, பொரிந்தவுடன் உள்ளங்கையளவு வறுத்த கச்சான் எடுத்து அதனை வதங்கிய இறைச்சியினுள் இட்டு மேலும் வதங்கவிடவேண்டும். அதன் பின்பு Scrape பண்ணிய கரட்டையும் சிறிதாக வெட்டிய பச்சைமிளகாயையுமும் கலந்து வதங்க விடவேண்டும் . அதன்பின்பு சிறிதாக வெட்டிய வெங்கயாம் தேங்காய் பூ என்பனவற்றையும் இட்டு Mix பண்ணி உப்பும் சரியா என்று பார்த்து நன்றாக வதங்கியபின்பு அடுப்பிலிருந்து இறக்கி எமது உணவுடன் Side dish ஆக சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும். Try பண்ணிப் பாருங்க.