திரையிசையில் மோகனம், கல்யாணி, ஹிந்தோளம் போன்ற ராகங்களைப் போன்று அல்லாமல் இந்த ரீதிகௌளையில் குறைந்தளவு பாடல்களே வந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் ரீதிகௌளை ராகத்தில் வெளிவந்த மிகவும் பிரபலமான பாடல்
சுப்பிரமணிய புரம் - கண்கள் இரெண்டால் பாடல்
இது மிகவும் அருமையானா ராகம் . கர்நாடக சங்கீதத்தில் ரீதிகௌளை ராகம் ஒரு ஜன்னிய ராகமாகும். ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இரகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர்.
முதல்வன் படத்தில் அழகான ராட்சசியே பாடல்.....
ரீதிகௌளை ராகம் மேளகர்த்தா ராகங்களில் ஒன்றான கரகரபிரியா ராகத்திலிருந்து பிறந்த சேய்ராகங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. எந்த நேரத்திலும் ரசிக்ககூடிய தன்மை கொண்டதாக காணப்படுகிள்றது இந்த ரீதிகௌளை ராகம்.
தம்பி - சுடும நிலவு சுடாத சூரியன்.......
பூந்தோட்டம் படம்- மீட்டாத ஒரு வீணை.....
ஒரு ஓடை நதியாகிறது படத்தில் தலையை குனியும் தாமரையே.......
ரீதிகௌளை
17:25
Sivany