சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தாலும் அடித்தார் ஆளாளுக்கு சச்சினை புகழ்து தள்ளுகிறார்கள்...
இரண்டு நாட்களுக்கு முன்னர் கவஸ்கர்; சச்சின் நிகழ்த்தியுள்ள உலக சாதனையைப் பார்த்ததும் அவரது காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று ரொம்பவே உணர்ச்சிசப்பட்டுள்ளார்.
இப்ப இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்; சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என்று புளகாங்கிதப்பட்டு கூறியுள்ளார்
உண்மையில் சச்சின் டெண்டுல்கரின் தொடர் சாதனைகளுக்கு, அவரது பணிவும், தன்னம்பிக்கையும், ஆர்வமும் தான் காரணம்.
ஆனால் போகிற போக்கில் அவரை சச்சின் சுவாமியாக மாற்றி கோவில் கட்டி குப்பாபிஷேகம் நடத்தி விடுவார்கள் போல் அல்லவா இருக்கின்றது.?
Please சச்சின் அடிக்கிறத இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்கள் எல்லாம் பார்க்கணும்